Breaking News

கல்வியமைச்சின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு வெளியிட்ட இலங்கை ஆசிரியர்கள் சங்கம்!

மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்திய பிரதேச பாடசாலைகளை தவிர நாட்டின் ஏனைய பகுதி பாடசாலைகளின் 3 ஆம் தவணை கற்றல் செயற்பாடுகளை எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பிக்க கல்வியமைச்சு மேற்கொண்ட தீர்மானத்திற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

இலங்கை ஆசிரியர் சங்கம் இந்த எதிர்ப்பினை வெளியிட்டுள்ளது.  

சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய மாணவர்கள் செயற்பட வேண்டிய விதம் தொடர்பில் உரிய வேலைத்திட்டம் அரசாங்கத்தால் முன்வைக்கப்படவில்லை என அந்த சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.  

எவ்வாறாயினும் மூன்றாம் தவணை கற்றல் செயற்பாடுகளுக்காக சகல அரச பாடசாலைகளிலும், தரம் 6 முதல் 13 வரையான மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 23ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.  

தரம் 1 முதல் 5 வரையான பாடசாலைகளும் மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிலுள்ள பாடசாலைகளும் திறக்கப்பட மாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

இதற்கமைய பாடசாலைகள் சமூக இடைவெளி உள்ளிட்ட சுகாதார நடைமுறைகளை பின்பற்றி கற்றல் செயற்பாடுகளை பின்பற்றுவதற்கு பாடசாலைகளின் அதிபர்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.