பிரித்தானிய வாழ் உறவுகளுக்கு உருக்கமான வேண்டுகை - THAMILKINGDOM பிரித்தானிய வாழ் உறவுகளுக்கு உருக்கமான வேண்டுகை - THAMILKINGDOM
 • Latest News

  பிரித்தானிய வாழ் உறவுகளுக்கு உருக்கமான வேண்டுகை


  தமிழர் தேசத்தின் நலனுக்காய் ஒரு மடல்!

  நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியாவின் தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

  அதன் முதற்கள தீர்ப்பு சட்டத்திற்கு முரணானது என்று அறிவித்திருந்த நிலையில் இரண்டாவது தீர்ப்பு 90 நாட்களுக்குள் தடை தொடர்பாக மறுபரிசீலனை செய்ய உத்தரவிட்டது.

  தீர்ப்புகள் தான் வந்துள்ளது. இன்னமும் தீர்வு வரவில்லை. தமிழரின் தலைவிதி தமிழரின் கையில் தீர்ப்பினை தீர்வாக மாற்றுவதும் எங்கள் கையிலே உள்ளது

  தீர்வினை நோக்கி தமிழர்களாக நாங்கள் என்ன செய்ய வேண்டும் அல்லது பங்கெடுத்துக்கொள்ள வேண்டும் என நினைக்கின்றீர்களா? 

  நீங்கள் வாழும் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மின்மடல் மூலமாக அழுத்தம் கொடுக்கலாம் அதற்கு என்ன செய்ய வேண்டும் என கேட்கின்றீர்களா இதோ.

  திரையில் பதிவுசெய்ய இதனை கிளிக் செய்யவும் எனும் லிங்கினை அழுத்துவதன் மூலமாகவோ உள் நுழைய முடியும் 

  அதன் பின் தோன்றுகின்ற திரையில் உங்கள் பிரதேச Postcode இனை பதிவு செய்வீர்கள் ஆயின் உங்கள் பகுதிக்கான பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குமாறு நீங்கள் கோருவதாக திரையில் தோன்றும் அதனை Submit பன்னுவதன் மூலம் உங்களுடைய மின்னஞ்சல் சென்றடையும் அதே நேரம் உங்களுக்கு automatic Reply வரும் 

  இவ்வளவு தான் நீங்கள் செய்ய வேண்டியது.                                                                    இங்குள்ள 650 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இதே போல ஆயிரக்கான மின்மடல் செல்லும் பட்சத்தில் தீர்வினை நோக்கிய எம் பயணத்திற்கு உந்துதலாக இருக்கும்.

  நாம் சட்டத்தின் மூலம்  பெற்ற வெற்றியை அரசியல் வெற்றியாக மாற்றிட இன்றே உங்கள் ஒருநிமிடத்தினை தேசக்கடமை என என்னி ஒதுக்கிக்கொள்ளுங்கள்.

  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: பிரித்தானிய வாழ் உறவுகளுக்கு உருக்கமான வேண்டுகை Rating: 5 Reviewed By: Bagalavan
  Scroll to Top