Breaking News

2022 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் அடுத்த மாதம் நாடாளுமன்றில்!

 


2022 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் 12ஆம் திகதி நாடாளுமன்றில் முன்வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்ற வாரத்தில் நிதியமமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் சமர்பிக்கப்படவுள்ளது.

வரவுசெலவுத் திட்டம் மீதான விவாதம் 7 நாட்கள் இடம்பெறவுள்ளதோடு 16 நாட்களுக்கு குழுநிலை விவாதத்தை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர வரவுசெலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.