Breaking News

அவசர அமைச்சரவைக் கூட்டத்துக்கு ஜனாதிபதி அழைப்பு!



 ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்றையதினம் (வியாழக்கிழமை) மாலை விசேட அமைச்சரவைக் கூட்டமொன்று நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்குமாறு அமைச்சர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பால்மா, கோதுமை மா, சமையல் எரிவாயு மற்றும் சீமெந்து ஆகியவற்றின் விலைகளை அதிகரிப்பது தொடர்பில் இதன்போது இறுதி முடிவெடுக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.