Breaking News

தடுப்பூசி ஏற்றிக்கொண்டவர்களுக்கான டிஜிட்டல் அட்டை -பணிகள் நிறைவு!

 


நாட்டில் முழுமையாக தடுப்பூசி ஏற்றிக்கொண்டவர்களுக்கான டிஜிட்டல் அட்டையை தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன.

துறைசார் இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஜயந்த டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த அட்டைகளை விநியோகித்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் தற்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைவாக, முழுமையாக தடுப்பூசிகளை செலுத்திக்கொண்ட, வௌிநாடுகளுக்கு செல்லும் எதிர்பார்ப்பிலுள்ளவர்களுக்காக குறித்த டிஜிட்டல் அட்டைகளை விநியோகிக்கும் செயற்பாடுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

போலியான அட்டையை தயாரிப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்காத வகையில் முழுமையான பாதுகாப்புடன் குறித்த அட்டை தயாரிக்கப்பட்டுள்ளது.

QR குறியீடு ஊடாக தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதாக துறைசார் இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஜயந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.