Breaking News

கொவிட் தொற்று குறைந்துவிட்டது என தவறாக எண்ண வேண்டாம் - சன்ன ஜயசுமன!

 


நாட்டின் தொற்றாளர் மற்றும் மரணங்கள் குறைந்து வருவதால், கொவிட் தொற்று குறைந்துவிட்டது என தவறாக எண்ண வேண்டாம் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் வைரஸ் மாற்றம் அடையாது என யாராலும் சொல்ல முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொவிட் தடுப்பூசி திட்டம் தொடர்பில் தடுப்பூசிகளை கொள்வனவு செய்வது தொடர்பான அனைத்து தகவல்களும் எதிர்காலத்தில் விரிவாக வௌிப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி திட்டம் தற்போது இறுதி கட்டத்தை அடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.