Breaking News

நாட்டின் இன்றைய கொரோனா விபரம்!



நாட்டில் மேலும் 490 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

அதன்படி, கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 526,873 ஆக அதிகரித்துள்ளது.

கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 23 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.

குறித்த அனைவரும் நேற்றைய தினம் (10) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13,354 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 480,499 ஆக அதிகரித்துள்ளது.