Breaking News

புதிய வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் போது பதிவு கட்டணம் அறிவிடப்பட மாட்டாது!



 புதிய வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் போது, 2022ம் ஆண்டு பதிவு செய்வதற்கான கட்டணம் அறிவிடப்படாது என நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) 76 ஆவது வரவு செலவு திட்டத்தை முன்வைத்து, உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் இளைஞர்களை தொழில் வழங்குனர்களாக மாற்றும் திட்டத்தை உருவாக்கி வருவதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இளைஞர்கள் மற்றும் யுவதிகளுக்கு பயிரிடப்படாத நிலங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு விவசாயிகள் உருவாக்கப்படுவார்கள் என்றும் இறப்பர் சார்ந்த உற்பத்திகளின் இறக்குமதிகளைக் கட்டுப்படுத்தவும் இறப்பர் சார்ந்த உற்பத்தி தொழிலை ஊக்குவிக்கவும் முன்மொழிவதாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.