பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பான விஷேட அறிவிப்பு!
இதுவரையில் ஆரம்பிக்கப்படாத தரங்களுக்கான கல்வி நடவடிக்கைகள் அடுத்த வாரத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இன்று (15) காலை பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வரவு செலவு திட்டம் மீதான விவாதத்தின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அனைத்து மாணவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தியதற்கு பின்னரே பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதனால் நாம் அனைவரும் பாடசாலைகள் ஆரம்பமானமையை எண்ணி மகிழ்ச்சியடைய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.








