அரசாங்கத்தின் மீது மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள் - ரணில்.. - THAMILKINGDOM அரசாங்கத்தின் மீது மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள் - ரணில்.. - THAMILKINGDOM

  • Latest News

    அரசாங்கத்தின் மீது மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள் - ரணில்..

     


    நாட்டு மக்கள் அரசாங்கத்தின் மீது கடும் கோபத்தில் இருப்பதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

    விசேட அறிக்கை ஒன்றை விடுத்துள்ள அவர், நாட்டில் டொலர் பற்றாக்குறை, வேலைவாய்ப்பு இன்மை, விவசாயிகள் பிரச்சினைகள் காணப்படுவதாக கூறினார்.

    கொரோனா தொற்றுக்கு மத்தியில், பல நாடுகள் 2020 மற்றும் 2021 ஆண்டுகளில் பொருளாதார முன்னேற்றத்தைக் காட்டியுள்ளன என்றும் சுட்டிக்காட்டினார்.

    எனவே தற்போதைய அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தாய் நாடி உதவி பெற்றுக்கொள்ள வேண்டும் அல்லது ஏற்றுக் கொள்ளக்கூடிய மாற்று வழியை முனைவைக்க வேண்டும் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

    எதிர்வரும் புத்தாண்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டால் மக்கள் மத்தியில் கடும் கோபம் ஏற்படும் என்றும் அது அரசாங்கத்தை பாதிக்கும் என அவர் சுட்டிக்காட்டினார்.

    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: அரசாங்கத்தின் மீது மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள் - ரணில்.. Rating: 5 Reviewed By: Thamil
    Scroll to Top