மாணவியை முச்சக்கரவண்டியில் கடத்திய ஆசிரியர்! - THAMILKINGDOM மாணவியை முச்சக்கரவண்டியில் கடத்திய ஆசிரியர்! - THAMILKINGDOM

 • Latest News

  மாணவியை முச்சக்கரவண்டியில் கடத்திய ஆசிரியர்!

   


  கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள அரசடித்தீவு பாடசாலையில் உயர்தர பரீட்சைக்கு சென்று திரும்பிய 21 வயதுடைய பெண் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார்.

  நேற்று (22) பிற்பகல் 2.45 மணியளவில் முச்சக்கரவண்டியில் வந்த குழுவினர் பெண்ணை கடத்திச் சென்றுள்ளதாக பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

  குறித்த பிரதேசத்திலுள்ள 21 வயதுடைய பெண் ஒருவருக்கும், மகழடித்தீவு பாடசாலை ஒன்றில் கற்பித்து வந்த 31 வயதுடைய ஆசிரியர் ஒருவருக்கும் இடையே காதல் ஏற்பட்ட நிலையில் பெண்ணின் வீட்டிற்கு ஆசிரியர் சென்று வந்துள்ளார்.

  இந்த நிலையில் பெண்ணின் வீட்டார் ஆசிரியரை திருமணம் முடிப்பதற்கு எதிர்த்து வந்துள்ளனர். இதனையடுத்து சம்பவ தினமான நேற்று குறித்த பெண் அரசடித்தீவு பாடசாலையில் உயர் தரப் பரீட்சைக்கு சென்று பரீட்சை எழுதிவிட்டு பாடசாலையில் இருந்து வெளியேறி வீதியில் நடந்து சென்ற போது, முச்சக்கரவண்டி ஒன்றில் வந்த ஆசிரியரின் குழுவினர் பெண்ணை இழுத்து முச்சக்கரவண்டியில் ஏற்றி கடத்தி சென்றுள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாணையில் தெரியவந்துள்ளது.

  இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: மாணவியை முச்சக்கரவண்டியில் கடத்திய ஆசிரியர்! Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top