Breaking News

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு 14 புதிய பயிற்சியாளர்கள் நியமனம்!

 


இலங்கை கிரிக்கெட் நிறுவனம் 14 புதிய பயிற்சியாளர்களை நியமித்துள்ளது.

அதன்படி, இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக ​நெதர்லாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்றுவிப்பாளர் Anton Roux நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், இலங்கை A அணி, வளர்ந்து வரும் அணி மற்றும் 19 வயதுக்குட்பட்ட அணிகளுக்கு புதிய பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை A அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக அவிஷ்க குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய பயிற்றுவிப்பாளர்கள் பின்வருமாறு,

திலின கண்டம்பி - உதவி பயிற்சியாளர்

மலிந்த வர்ணபுர - துடுப்பாட்ட பயிற்சியாளர்

சஜீவ வீரகோன் - பந்துவீச்சு பயிற்சியாளர்

உபுல் சந்தன - பந்துவீச்சு பயிற்சியாளர்

இலங்கை வளர்ந்த வரும் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக ருவான் கல்பகே நியமிக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய பயிற்றுவிப்பாளர்கள் பின்வருமாறு,

ருவின் பீரிஸ் - உதவி பயிற்சியாளர்

தர்ஷன கமகே - பந்துவீச்சு பயிற்சியாளர்

தம்மிக்க சுதர்சன - துடுப்பாட்ட பயிற்சியாளர்

19 வயதுக்குட்பட்டோருக்கான அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஜெஹான் முபாரக் நியமிக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய பயிற்றுவிப்பாளர்கள் பின்வருமாறு,

சம்பத் பெரேரா - உதவி பயிற்சியாளர் / துடுப்பாட்ட பயிற்சியாளர்

சமில கமகே - பந்துவீச்சு பயிற்சியாளர்

கயான் விஜேகோன் - பந்துவீச்சு பயிற்சியாளர்.