Breaking News

அவுஸ்ரேலிய பிரதமராக அந்தனி அல்பனிஸ் தெரிவு!

 




நேற்று இடம்பெற்ற அவுஸ்ரேலிய பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று தொழில் கட்சி சார்பில் போட்டியிட்ட அந்தனி அல்பனிஸ் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஒரு தசாப்த காலத்திற்கு பின்னர் தொழில் கட்சியில் இருந்து அவுஸ்ரேலியாவின் பிரதமராக ஒருவர் தெரிவாகியுள்ளார்.

இந்த தேர்தலில் லிபரல் கட்சி தலைவர் ஸ்கொட் மொரிசன் மற்றும் தொழில் கட்சி தலைவர் அந்தனி ஆல்பனிஸ் ஆகியோருக்கு இடையில் போட்டி நிலவியிருந்தது.

அவுஸ்ரேலியாவில் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு மொத்த 151 உறுப்பினர் இடங்களில் 76 இனை கைப்பற்ற வேண்டியது அவசியமாகும்.

தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் அந்தனி அல்பானிஸ் தலைமையிலான தொழில் கட்சி 72 இடங்களை கைப்பற்றியதுடன், 55 இடங்களை ஸ்கொட் மொரிசன் கட்சி பெற்றுக்கொண்டது.

15 இடங்களை சுயாதீன மற்றும் ஏனைய கட்சிகள் கைப்பற்றியுள்ளன. ஆனால் அவரது கட்சிக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இந்நிலையில் காலநிலை கொள்கையில் பெரிய மாற்றத்துடன் நாட்டை ஒரு புதிய திசையில் கொண்டு செல்வதாக புதிய பிரதமர் உறுதிமொழி வழங்கியுள்ளார்.