Breaking News

முன்னாள் பிரதமரை பாதுகாப்பது முப்படையினருக்கு உரித்தாக்கப்பட்டுள்ள கடமை – இராணுவத்தளபதி!

 


மக்களால் தெரிவு செய்யப்பட்ட தலைவரான முன்னாள் பிரதமரை பாதுகாப்பது அரசியலமைப்பின்படி முப்படையினருக்கு உரித்தாக்கப்பட்டுள்ள கடமையாகும் என இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை திருகோணமலைக்கு அழைத்துச் சென்றதாக பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரத்ன தெரிவித்துள்ள நிலையில், சவேந்திர சில்வா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் மக்களின் பாதுகாப்பிற்காகவே இராணுவத்தினர் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர் என்றும் எனவே அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்தோடு, நாட்டில் வன்முறைகள் பாரதூரமானால் அவற்றை கட்டுப்படுத்தும் அதிகாரம் இராணுவத்திற்கு வழங்கப்படுமே தவிர , அது ஒருபோதும் இராணுவ ஆட்சியாக மாறாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.