மஹிந்த ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரியதே என் வாழ்க்கையில் எடுத்த மிகவும் வேதனையான தீர்மானம் - ஜனாதிபதி!
மஹிந்த ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரியதே என் வாழ்க்கையில் எடுத்த மிகவும் வேதனையான தீர்மானம் - ஜனாதிபதி!
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரியதே தனது வாழ்க்கையில் எடுத்த மிகவும் கடினமான மற்றும் வேதனையான தீர்மானம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
நாட்டை நினைத்துதான் இவ்வாறான தீர்மானத்தை எடுத்ததாக ஜனாதிபதி தெரிவித்தார்.
தமது முழுமையான ஒருமித்த கருத்துடன் 21ஆவது திருத்தம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்றக் குழுவுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.
இந்த சந்திப்பின் போது நீதியமைச்சர் பேராசிரியர் விஜேதாச ராஜபக்ஷ, அரசியலமைப்பின் உத்தேச 21வது திருத்தம் குறித்து குழுவிற்கு விளக்கமளித்தார்.








