Breaking News

மக்களின் கருத்துக்கு முன்னாள் ஜனாதிபதிக்கு நேர்ந்த கதியே ஏற்படும். - சஜித் !

 


69 இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த முன்னாள் ஜனாதிபதி மக்களின் கருத்துக்கு செவிசாய்க்காத காரணத்தினாலேயே பதவியை விட்டு விலக நேரிட்டது என்பதை பாராளுமன்றத்தில் உள்ள அனைவரும் நன்கு புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அவ்வாறு இல்லாவிடின் முன்னாள் ஜனாதிபதிக்கு நேர்ந்த கதியே ஏற்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (20) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அரசியலமைப்பின் பிரகாரமே பாராளுமன்றம் செயற்பட வேண்டும் என்றும், அது இல்லாமல் முறையற்ற சட்ட ஆட்சி செயற்பட முடியாது என்று கூறிய எதிர்க்கட்சித் தலைவர், 2019 பொதுத் தேர்தலின் மக்கள் ஆணைக்கு மதிப்பளித்தே தான் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடவில்லை என்றும் தெரிவித்தார்.

அத்துடன், கடந்த காலங்களில் மூச்சு வேலைத் திட்டத்தை அமுல்படுத்திய வன்னம் மக்களுக்காக பெரும் சேவையை செய்ததாகத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக முழுமையாக அர்ப்பனிப்புடன் செயற்படுவதாகவும் தெரிவித்தார்.

புதிய ஜனாதிபதியின் எதிர்காலப் பணிகள் சிறப்பாக அமைய வாழ்த்துவதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், நாட்டைக் கட்டியெழுப்புவது அனைவரினதும் எதிர்பார்ப்பாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.