Breaking News

எங்களுக்கு தளபதி தேவையில்லை.. விஜய் போதும் - ரசிகர்கள்!

 


வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். 

மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். வாரிசு இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த மாத இறுதிக்குள் இதன் முழு படப்பிடிப்பும் முடிவடைந்துவிடும் எனக் கூறப்படுகிறது.

 இந்நிலையில், சென்னை, எண்ணூரில் நடைபெற்ற படப்பிடிப்பில் நடிகர் விஜய் கலந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் பலர் விஜய்யை பார்க்க குவிந்துள்ளனர். 

அவரை பார்க்க முற்பட்ட போது போலீசார் தடியடி நடித்தி விரட்டியுள்ளனர். இதனால் ஆதங்கமடைந்த ரசிகர்கள், "நாங்க இதெல்லாம் யாருக்காக செய்கிறோம். எங்களுக்கு தளபதியே தேவையில்லை. வாரிசு எங்களுக்கு விஜய்யை பார்க்க ஆசையாக உள்ளது. 

இந்த வாசல் முன்பு வந்து கை அசைத்தால் போதும். ரஜினி, சூர்யா வந்த போது ரசிகர்களை அனுமதித்தார்கள். தளபதி வந்தால் மட்டும் ஏன் அனுமதிக்கவில்லை" என்று பேசினர்.