திலீபம் – ஆவணப்பதிவுகள்
1987 செப்டெம்பர் 15ஆம் திகதி ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் 26ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.48 மணிக்கு லெப்டினன் கேணலாக, அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த திலீபன் தியாக மரணம் எய்தினார்.
ஐந்து அம்சக் கோரிக்கை
1. பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறிலங்காவின் சிறைகளில் அல்லது தடுப்புகாவலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவேண்டும்.
2. புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள சிங்களக் குடியேற்றங்கள் யாவும் உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.
3. இடைக்கால அரசு அமைக்கப்படும் வரை புனர்வாழ்வு எனும் பெயரில் நடத்தப்படும் சகல வேலைகளும் நிறுத்தப்படல் வேண்டும்.
4. வடக்கு கிழக்கு மாகாணங்களில் பொலிஸ் நிலையங்கள் திறக்கப்படல் உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.
5. இந்திய அமைதிப்படைகளின் மேற்பார்வையின் கீழ் ஊர்காவல் படைகளின் ஆயுதங்கள் மீளப்பெறப்படல் வேண்டும். பாடசாலை கட்டிடங்களில் உள்ள இராணுவம் வாபஸ் பெறப்படவேண்டும்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”