Breaking News

அஜித் படத்தில் வில்லனாகும் தனுஷ்?

 


இப்போதெல்லாம் முன்னணி கதாநாயகர்கள் மற்ற நடிகர்களின் படங்களில் வில்லனாகவோ, சில நிமிடங்கள் வந்துபோகும்படியான கவுரவத் தோற்றத்திலே நடிக்க சம்மதம் சொல்கிறார்கள்.

 கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் சூர்யா கிளைமாக்சில் வில்லனாக வந்து மிரட்டினார். ஷாருக்கானின் இந்தி படத்தில் விஜய் கவுரவ தோற்றத்தில் வருகிறார். விஜய்சேதுபதி பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.   

தனுஷ் லோகேஷ் கனராஜ் இயக்கத்தில் விஜய் அடுத்து நடிக்க உள்ள படத்தில் வில்லனாக நடிக்க விஷாலை அணுகினர். அவருக்கு விருப்பம் இருந்தாலும் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களில் நடிக்க வேண்டி இருப்பதால் இயலாது என்று மறுத்து விட்டார். அவருக்கு பதில் அர்ஜுன் வில்லனாக வருகிறார்.

இந்த நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்க உள்ள புதிய படத்தில் வில்லனாக நடிக்க தனுசிடம் பேசி வருவதாகவும் தனுசும் வில்லனாக நடிக்க சம்மதிப்பார் என்றும் இணைய தளங்களில் தகவல் பரவி வருகிறது. ஆனாலும் படக்குழுவினர் இதனை உறுதிப்படுத்தவில்லை.