Breaking News

தொடர்ந்து போஸ்டர்களை வெளியிட்டு அப்டேட் கொடுக்கும் 'துணிவு' படக்குழு!




எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் 'துணிவு'. இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

 போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. துணிவு 'துணிவு' திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. சமீபத்தில் 'துணிவு' படத்தின் 'சில்லா சில்லா', காசேதான் கடவுளடா', 'கேங்ஸ்டா'ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

இதைத்தொடர்ந்து, 'துணிவு' திரைப்படத்தில் நடிகர் பிரேம், பிரேம் என்ற கதாபாத்திரத்திலும் பட்டிமன்ற பேச்சாளர் மோகன சுந்தரம் , மைபா என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளதாக படக்குழு தெரிவித்திருந்தது. 

 இந்நிலையில், ராஜேஷ் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் பக்ஸும் கிரிஷ் என்ற கதாபாத்திரத்தில் ஜான் கொக்கேனும் நடித்துள்ளதாக போஸ்டர்களை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. தொடர்ந்து வெளியாகும் அப்டேட்டால் அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.