அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு!
இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நான்கு அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இதற்கமைவாக சிவப்பு பச்சை அரிசி 6 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் அதன் புதிய விலை 199 ரூபாவாகும்.
கீரி சம்பா விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 225 ரூபாவாகும்.
அத்துடன் பெரிய வெங்காயத்தின் விலை 30 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் புதிய விலை 225 ரூபாவாகும்.
மேலும் நெத்தலியின் விலை 150 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் புதிய விலை 1,150 ரூபாவாகும்.