Breaking News

கட்சிகளின் ஒன்றுணை கூட்டத்திலிருந்து வெளியேறினார் விக்கி(காணொளி)


தமிழரசு கட்சி தனியே உள்ளுராட்சித்தேர்தலில் களமிறங்கவிருப்பதாக அறிவித்திருந்த நிலையில் த.தே.கூட்டமைப்பில் பங்காளிகளாக இருந்த கட்சிகளும் விக்கினேஸ்வரன் உள்ளிட்ட தரப்பினர் கூட்டிணைவதற்கான பேச்சுவார்த்தை இன்று யாழில் இடம்பெற்றது. 

கூட்டமைப்பின் ஏனைய பங்காளி கட்சிகள் ஏற்கனவே பதிவு செய்திருந்தமையால் அதற்கு அங்கீகரிக்கப்பட்ட குத்துவிளக்கு சின்னத்தினை தேர்தலுக்கான சின்னமாக தீர்மானித்திருப்பதாக ஏனைய கட்சிகள் தெரிவித்தபோது,  அண்மையில் தேர்தல்கள் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ் மக்கள் கூட்டணியின் மான் சின்னத்தை கூட்டமைப்பின் சின்னமாக அறிவிக்கவேண்டும் என சி.வி.விக்னேஸ்வரனும், வி.மணிவண்ணனும் தெரிவித்த நிலையில் முடிவு எட்டப்படாத காரணத்தால் இடைநடுவில் இருவரும் வெளிநடப்பு செய்திருந்தனர். 


   

இந்த சந்திப்பு இடம்பெற்றபின்னர் ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன்,ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன்,புளொட் தலைவர் சித்தார்த்தன்,சிறிகாந்தா,ஜெனநாயக போராளிகள் கட்சியை சேர்ந்த வேந்தன் ஆகியோர் பத்திரிகையாளர் மாநாட்டை நடாத்தியிருந்தனர். நாளை கட்சிகள் திரும்பவும் கூடி புரிந்துணர்வு உடன்படிக்கை மற்றும் பொதுச்சின்னம் தொடர்பில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தனர்.