பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் பங்கேற்க விஜயகாந்த் வியாஸ்காந்திற்கு அனுமதி!
பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் பங்கேற்க விஜயகாந்த் வியாஸ்காந்திற்கு இலங்கை கிரிக்கட் சபை அனுமதி வழங்கியுள்ளது.
2023ஆம் ஆண்டுக்கான பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் விளையாடுவதற்காக இலங்கையின் இளம் வீரரான விஜயகாந்த் வியாஸ்காந்த் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதற்கமைய, Chattogram Challengers அணியுடன் விஜயகாந்த் வியாஸ்காந்த் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளார்.
இந்தநிலையில் குறித்த தொடரில் பங்கேற்பதற்கு விஜயகாந்த் வியாஸ்காந்திற்கு இலங்கை கிரிக்கட் சபை இதுவரை அனுமதி வழங்கவில்லை என தகவல்கள் வெளியாகியிருந்தன.
எனினும், 2023ஆம் ஆண்டுக்கான பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் விளையாடுவதற்கு விஜயகாந்த் வியாஸ்காந்திற்கு நேற்றைய தினம்(திங்கட்கிழமை) அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.