Breaking News

தேர்தலுக்கு எதிரான மனு - உயர் நீதிமன்றின் உத்தரவு!

 


உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைக்குமாறு கோரி ஓய்வு பெற்ற இராணுவ கேணல் ஒருவரினால் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனு மீதான பரிசீலனையை எதிர்வரும் மார்ச் மாதம் 11 ஆம் திகதி வரை ஒத்தி வைக்க உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது.

எஸ். துரை ராஜா, ஏ. எச். எம். டி. நவாஸ் மற்றும் ஷிரான் குணரத்ன ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன் இந்த மனுக்கள் இன்று பரிசீலிக்கப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.