Breaking News

நெருக்கமான நபரால் புதின் கொல்லப்படுவார்- ஜெலன்ஸ்கி !

 


உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து ஒரு ஆண்டை தாண்டி விட்டது. இந்த போரால் உக்ரைன் நகரங்கள் சின்னபின்னமாகி வாழ்வதற்கே தகுதியற்ற நிலை உருவாகி இருக்கிறது. பல நாடுகள் உக்ரைன் போரை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. ஐ.நா. சபையில் தீர்மானம் நிறைவேற்றினாலும் ரஷியா தனது நிலைபாட்டில் உறுதியாக உள்ளது. 

உக்ரைனை எப்படியும் பிடித்தே தீர வேண்டும் என்ற வெறியில் தொடர்ந்து போரில் ஈடுபட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷிய அதிபர் புதின் கொல்லப்படுவார் என்ற பரபரப்பான தகவலை தெரிவித்து உள்ளார்.

 இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:- உக்ரைன் போர் காரணமாக புதின் மீது அவருக்கு நெருக்கமானவர்கள் கடும் விரக்தியில் உள்ளனர். பதவியில் இருக்கும் போது அவருக்கு ஒரு பலவீனமான காலம் வரும். இந்த தருணத்தின் போது புதினுக்கு நெருக்கமானவர்களால் அவர் கொல்லப்படலாம். 

இது நிச்சயம் நடக்கும். ஆனால் அது எப்போது நடக்கும் என்பது பற்றி தெரியாது. இவ்வாறு அவர் கூறி உள்ளார். ஜெலன்ஸ்கி கருத்துக்கு அரசியல் நோக்கர்கள் மறுப்பு தெரிவித்து உள்ளனர். புதின் தனக்கு மிகவும் நம்பிக்கையானவர்களை உயர் பொறுப்புகளில் நியமித்து உள்ளார். இதனால் ஜெலன்ஸ்கி சொல்வது சாத்தியம் இல்லை என்று அவர்கள் கூறி உள்ளனர்.