Breaking News

வரிக் கொள்கையில் மாற்றங்கள் - ஜனாதிபதி அறிவிப்பு!

 


சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதி மூலம் வீழ்ச்சியடைந்த நாட்டை வழமைக்கு கொண்டு வர முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த கடன் வசதியை பெற்றுக்கொள்வதன் மூலம் இலங்கை மீண்டும் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்படும் என ஜனாதிபதி பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில் தெரிவித்தார்.

மேலும் உரையாற்றிய ஜனாதிபதி, எதிர்காலத்தில் நாட்டில் பல பொருளாதார சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.

கடந்த வரவு செலவுத் திட்டத்தில் சில விடயங்கள் முன்மொழியப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த ஜனாதிபதி, எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள இவ்வாறான சீர்திருத்தங்கள் தொடர்பிலும் தமது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

இதன்போது அரசின் வருவாயை அதிகரிக்கும் திட்டம் தொடர்பில்,

* 2025 க்குள் முதன்மை பற்றாக்குறையை 2.3 ஆக்குதல்.

* 2026 க்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15% ஆக அரசாங்க வருவாயை அதிகரிப்பது.

* துறை சார்ந்த வரிச் சலுகைகள் இல்லாமல் வருமான வரி விகிதம் 30% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

* VAT வரியை 8% - 15% ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

* VAT க்கு வழங்கப்பட்ட விலக்கு வரியை படிப்படியாக குறைத்தல், VAT திரும்பப்பெறுதலை விரைவுபடுத்துதல், SVAT முறையை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள்.

* 2025 ஆம் ஆண்டில், சொத்து வரி முறையை குறைந்தபட்ச வரி விலக்குடன் ஒரு செல்வ வரி மாற்றும்.

* பரிசு மற்றும் எஸ்டேட் வரி அறிமுகப்படுத்தப்படும்.