சிறைக்கைதிகளுக்கு மிகப்பெரிய பரிசளித்த விஜய் சேதுபதி!
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்து வருகிறார். இந்தியில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள 'மெரி கிறிஸ்துமஸ்' திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தொடர்ந்து பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.
விஜய் சேதுபதி இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி -சூரி நடிப்பில் உருவாகியுள்ள 'விடுதலை' திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. விஜய் சேதுபதி நடிப்பதோடு மட்டுமல்லாமல் பல பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சமூக கருத்துகளை பகிர்ந்து வருகிறார்.
மதுரை மத்திய சிறை நூலகத்திற்கு புத்தகம் வழங்கிய விஜய் சேதுபதி இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி, மதுரை மத்திய சிறை நூலகத்திற்கு ஆயிரம் புத்தகங்களை வழங்கி உள்ளார். அதனை மதுரை மத்திய சிறைத்துறை துணைத் தலைவர் பழனி மற்றும் சிறைத்துறை காவல் கண்காணிப்பாளர் வசந்த கண்ணன் பெற்றுக்கொண்டனர். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.