எதிர்காலத்தில் பேருந்து கட்டணம் குறையும் சாத்தியம் !
எதிர்காலத்தில் பேருந்து கட்டணங்கள் குறையலாம் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
களுத்துறையில் இடம்பெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், விலைச்சூத்திரத்திற்கு அமைவாக பேருந்து கட்டணங்கள் திருத்தப்படும்.
இதேவேளை, எதிர்வரும் புத்தாண்டு காலப்பகுதியில் உற்பத்தியாளர்களுக்கு நாடளாவிய ரீதியில் அனைத்துப் பகுதிகளிலும் வீதி ஓரங்களில் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்படுமென அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.








