Breaking News

ராஜமவுலி இல்லை என்றால் பொன்னியின் செல்வன் உருவாகியிருக்காது -மணிரத்னம்

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன்-2 திரைப்படம் வருகிற 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. முதல் பாகத்தின் வரவேற்பால் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

பொன்னியின் செல்வன் -2 மேலும் இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இப்படம் தென்னிந்திய சினிமாவில் முதல்முறையாக 4DX தொழில்நுட்பத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்தப் படத்தின் புரொமோஷனுக்காக படக்குழு இந்தியா முழுவதும் சென்று வருகின்றனர். 

 சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனர் மணிரத்னம் கூறியதாவது, தயாரிப்பாளர் சுபாஸ்கரன் அவர்களுக்கு நன்றி. இந்த விஷயத்தை நான் இதற்கு முன்பே சொல்லி இருந்தாலும் மறுபடியும் சொல்கிறேன். நான் ராஜமவுலிக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். 

'பாகுபலி' இரண்டு பாகங்களாக அவர் உருவாக்காவிட்டால் நானும் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தை இரண்டு பாகங்களாக உருவாக்கி இருக்க மாட்டேன். இது எனக்கு புது பாதையை உருவாக்கி தந்தது. நிறைய வரலாற்று கதைகளை எடுக்க முடியும் என்ற நம்பிக்கையை சினிமாத்துறையில் பலருக்கும் கொடுத்தது. இதை அவரை சந்தித்தும் நான் சொல்லி இருக்கிறேன் என்றார்.