விஜய் சேதுபதி சொல்லி நான் கேட்காமல் இருந்ததில்லை - மணிகண்டன் நெகிழ்ச்சி !
'ஜெய் பீம்' மணிகண்டன் கதையின் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'குட் நைட்'. இப்படத்தை அறிமுக இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இயக்கியுள்ளார்.
இப்படத்தின் நாயகியாக மீதா ரகுநாத் நடித்துள்ளார். இதில் ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், பக்ஸ் என்ற பகவதி பெருமாள், ரேச்சல் ரெபாக்கா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
குட் நைட் ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இப்படம் இன்று (மே 12) திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், நடிகர் மணிகண்டன், விஜய் சேதுபதி சொல்லி நான் கேட்காமல் இருந்ததில்லை என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், "சமீபத்தில் நான் பிரச்சினையில் இருக்கும் போது திடீரென விஜய் சேதுபதி அண்ணா என்னை தொலைபேசியில் அழைத்து நான் மும்பையில் இருக்கிறேன்.
நீ சோகமாக இருப்பது போல் எனக்கு தோன்றியது அதனால் தான் அழைத்தேன் என்று கூறினார். அப்போது என் கஷ்டத்தை கூறினேன். அதற்கு விஜய் சேதுபதி எந்த பிரச்சினை என்றாலும் இரண்டு நாட்கள் தான் இருக்கும் மூன்றாவது நாள் அது சரியாகிவிடும் என்று என்னை தேற்றினார். இப்போது வரை அவர் எது சொல்லியும் நான் கேட்காமல் இருந்ததில்லை" என்று கூறினார்.