Breaking News

எலிக் காய்ச்சலின் தாக்கம் அதிகரித்துள்ளது-இலங்கை மருத்துவ சங்கம்!

 


எலிக் காய்ச்சலின் தாக்கம், தற்போது கணிசமாக அதிகரித்துள்ளதாக, இலங்கை மருத்துவ சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக கருத்து வெளியிட்ட, இலங்கை மருத்துவ சங்கத்தின் தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவின் சமூகநல வைத்திய அதிகாரி குஷானி தாபரே, சிறுபோகம் இடம்பெறும் மார்ச் முதல் மே மாதம் வரையான காலப்பகுதியிலும், பெரும்போகம் இடம்பெறும் செப்டம்பர் முதல் டிசம்பர் வரையான காலப்பகுதியில், எலிக் காய்ச்சலின் தாக்கம் அதிகரிப்பதாகத் தெரிவித்தார்.

எனவே குறித்த காலப்பகுதியில், விவசாயிகளுக்கு, இது தொடர்பில் தெளிவுபடுத்தி, நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதன் மூலம், எலிக் காய்ச்சல் பரவலில் இருந்து, பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் எனவும் வைத்தியர் குஷானி தாபரேரா குறிப்பிட்டுள்ளார்.