Breaking News

விஜய்-திரிஷா புகைப்படத்தை வெளியிட்ட லியோ படக்குழு!

 


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார்.

 இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்றதையடுத்து சமீபத்தில் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்தது. தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. 

 இந்நிலையில், திரிஷாவின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு விஜய் மற்றும் திரிஷா இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.