அடேங்கப்பா.. எவ்ளோ நீளமான நாக்கு: கின்னஸ் சாதனை படைத்த நாய்!
அமெரிக்காவின் இல்லினாய்ஸைச் சேர்ந்த நாய் ஒன்று, 5.6 அங்குலங்கள் நீளமான நாக்கு கொண்டுள்ளதை அடுத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளது. பிராட் மற்றும் கிரிஸ்டல் வில்லியம்ஸின் 9 வயதான பாக்ஸர் வகையை சேர்ந்த நாய் ராக்கி.
இந்த நாய்க்கு வழக்கத்திற்கு மாறாக நீண்ட நாக்கு இருப்பதை உரிமையாளர்கள் அறிந்தனர். இதுகுறித்து பலரும் கருத்து தெரிவித்ததால் கின்னஸ் சாதனையில் போட்டியிட உரிமையாளர்களுக்கு உறுதிப்படுத்தியுள்ளது.
முந்தைய சாதனையாளரான மோச்சி என்கிற நாயின் மரணத்தைப் பற்றி கேள்விப்பட்ட ராக்கியின் உரிமையாளர்கள் போட்டிக்கு விண்ணப்பிக்க முடிவு செய்தனர்.
அப்போதுதான், முந்தைய கின்னஸ் சாதனை படைத்த நாயின் நாக்கின் அளவு மூன்று முதல் நான்கு அங்குலம் இடையில் இருப்பதாகச் சொன்னார்கள்.
இதை அறிந்தவுடன் ராட் மற்றும் கிரிஸ்டல் ஆகியோர் இது தங்களுக்கு கிடைத்த ஒரு அறிய வாய்ப்பாக கருதி விண்ணப்பித்தனர். இதற்கான சமர்ப்பிப்பு செயல்முறை நீண்ட மற்றும் கடினமானதாக இருந்ததாகவும், போட்டிக்கு விண்ணப்பிக்கும் முன் ராக்கியின் நாக்கு அளவீடுகளை இரண்டுக்கு அல்லது மூன்று முறை சாிபார்த்து பின்னர் சமர்ப்பித்ததாகவும் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, கின்னஸ் குழுவினர் தங்கள் கால்நடை மருத்துவரான டாக்டர் பெர்னார்ட்டை ராக்கியின் நாக்கை அளவீடு செய்ய அனுப்பியுள்ளனர். அளவு எடுத்த டாக்டர், "ராக்கி சாதனைக்கு தகுதியானது" என தெரிவித்தார். இந்நிலையில், ராக்கி 5.6 அங்குல நீள நாக்கு கொண்ட நாய் என்கிற பட்டத்துடன் கின்னஸ் சாதனை படைத்துள்ளது.