Breaking News

நாளை முதல் மின்சார கட்டணம் குறைப்பு!

 


நாளை (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் மின்சார கட்டணத்தை 14.2 வீதத்தால் குறைக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

புதிய கட்டண திருத்தத்தின்படி, 0 முதல் 30 அலகு வரையிலான மாதாந்திர நுகர்வு கொண்ட பிரிவினருக்கு அலகிற்கு 30 ரூபாய் என வசூலிக்கப்படும் கட்டணம் 10 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்த பிரிவிற்கு வசூலிக்கப்படும் நிலையான கட்டணமும் 400 ரூபாயில் இருந்து 150 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

60 அலகுகளுக்கு குறைவான பிரிவில் அலகிற்கான கட்டணம் 42 ரூபாயிலிருந்து 32 ரூபாவாகவும், அந்த பிரிவினருக்கு 650 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்ட மாதாந்திர கட்டணம் 300 ரூபாய் ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.

91 முதல் 120 அலகுகளுக்கு இடைப்பட்ட பிரிவுக்கு அலகு கட்டணம், 42 ரூபாயில் இருந்து 35 ரூபாய் ஆகவும், மாதாந்திர நிலையான கட்டணம் 1500 ரூபாயில் இருந்து 1000 ரூபாய் ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.