எதிர்வரும் ஜூலை மாதம் பேருந்து கட்டணத்தில் திருத்தம்?
எதிர்வரும் ஜூலை மாதம் நடைபெறும் பேருந்து கட்டண மீளாய்வின் போது பேருந்து கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இம்முறை எரிபொருள் விலை திருத்தத்தில் டீசல் விலையில் குறைப்பு இல்லையென்றாலும் கடந்த மாதம் டீசல் விலை குறைக்கப்பட்டதை கருத்தில் கொண்டு பேருந்து கட்டணத்தை திருத்த தயாராக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், 15 ரூபாவினால் டீசல் விலை குறைக்கப்பட்டதன் பயனை மக்களுக்கு வழங்கு எதிர்ப்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.
மேலும் பொருட்களின் விலைகள், உதிரி பாகங்களின் விலைகள் மற்றும் இதர பொருட்களின் விலைகள் கணக்கிடப்பட்டு, ஜூலை 1 ஆம் திகதி பேருந்து கட்டணங்கள் திருத்தம் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.