கோதுமை மா அத்தியாவசியப் பொருளாக அறிவிப்பு!
கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், கோதுமை மாவை அத்தியாவசியப் பொருளாக அரசாங்கம் அறிவித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் கோதுமை மாவின் விலையை ஒழுங்குபடுத்துவதற்கும் சந்தையில் போதுமான அளவு கோதுமை மா கிடைப்பதை உறுதி செய்வதற்கும் அரசாங்கத்திற்கு அதிகாரம் கிடைத்துள்ளது.