Breaking News

யாழில் 33 வருடங்களின் பின் விடுவிக்கப்படவுள்ள காணிகள் !!

 


யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வைரவர் ஆலயம் மற்றும் அதனை சூழவுள்ள சில பகுதிகள் 33 வருடங்களின் பின்னர் மக்களிடம் மீள கையளிக்கப்படவுள்ளது.

உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்படிருந்த ஜே 233 கிராம சேவையாளர் பகுதியில் உள்ள தனியார் காணிகளில் இருந்து இராணுவத்தினர் தற்போது வெளியேறியுள்ளனர்.

இந்நிலையில் மிக விரைவில் விடுவிக்கப்படும் காணிகள் அனைத்தும் மக்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவுள்ளன.