Breaking News

5 ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை ஒக்.15!

 


2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 15 ஆம் திகதி நடைபெறும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் ஜூன் 15 ஆம் திகதி முதல் ஜூலை 6 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தரவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஜூலை 6 ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்குப் பின்னர் இணையத்தின் ஊடாக விண்ணப்பிக்கவும் முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் எக்காரணம் கொண்டும் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலக்கெடு நீட்டிக்கப்படமாட்டாது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.