Breaking News

பாராளுமன்ற வரவு செலவு அலுவலகத்தை நிறுவ அனுமதி!

 


பாராளுமன்ற வரவு செலவு அலுவலகத்தை நிறுவுவதற்கான சட்டமூலம், அரசாங்க நிதிக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் நிதிக்குழு அதன் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தலைமையில் கூடிய போது, ​​ஒரு திருத்தத்திற்கு உட்பட்டு உரிய சட்டமூலத்திற்கு அனுமதி வழங்கப்பட்டதாக பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நீண்ட காலத்திற்கு பின்னேரேனும் வரவு செலவுத் திட்ட அலுவலகம் நிறுவுவது, மிகவும் முக்கியமானதொரு நடவடிக்கை எனவும் குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

வரவு செலவுத் திட்டப் பகுப்பாய்வுச் செயற்பாட்டிற்குத் தேவையான சுதந்திரத்தை இந்தச் செயற்பாடு உறுதிப்படுத்தும் எனவும் அரசாங்க நிதிக் குழுவின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தொிவித்துள்ளாா்.