Breaking News

அகில இலங்கை சைவ மகா சபை விசேட அறிவிப்பு!

 


அனைத்து சைவ அமைப்புக்களும் வெள்ளி ஞாயிறு விடுமுறையை சிறார்கள் சரிவர ஆலய வழிபாட்டிற்கும் அறநெறிக்கும் குடும்பத்துடன செலவிடவும் பரப்புரைகளையும் பொறிமுறைகளையும் ஆரம்பிக்க வேண்டும் என அகில இலங்கை சைவ மகா சபை அழைப்பு விடுத்துள்ளது.


அகில இலங்கை சைவ மகா சபையின் பொதுச் செயலாளர் பரா.நந்தகுமார் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த செய்திக் குறிப்பிலே,

நெருக்கீட்டுடனும் அறநெறி பிறழ்ந்து போதைக்கும் விபத்துக்களுக்கும் ஆளாகி வரும் இளைய சமுதாயத்தை மீட்டெடுக்கும் முயற்சியின் ஓர் அங்கமான அரச அதிபரின் தலைமைத்துவத்துடன் முன்னெடுக்கப்படும் சிறந்த வேலைத்திட்டத்தை குழப்ப சிலர் முனைந்து வரும் நிலையில் இதற்கு எவரும் இடங் கொடுக்க வண்ணம் தனியார் கல்வி நிலையங்கள் பெற்றோர் பாடசாலைகள் தொடர் விழிப்புணர்வு ஊட்ட வேண்டும். சம்பந்தப்பட்ட துறைகள் கண்காணிப்பு பொறிமுறைகள் திறம்பட இயங்குவதை உறுதிப்படுத்த வேண்டும்.

இந்த செயற்பாடுகள் தரம் 09 கீழேயே நடைமுறைப்படுத்தப்படுவதால் O/L ,A/L மாணவர்களின் மேலதிக கல்வியோ தூர இடங்களிலிருந்து வந்து கற்கும் அந்த பிள்ளைகளின் கல்வியோ பாதிக்கப்பட மாட்டாது என்பதையும் பிரத்தியேக வகுப்புக்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு வருவதால் இந்த நேரத்தில் அவை நடாத்தும் சாத்தியப்பாடுகள் இல்லாதொழிக்கப்படும் என்பதையும் மனங்கொள்ள வேண்டும்.

கல்வி என்பது வாழ்வதற்கான விழுமியங்களை கற்று தரும் மனிதனின் அடிப்படை விடயம் என்பதால் அதில் ஈடுபட்டுள்ள சகலரும் அறத்தையும் உண்மைத்தன்மையும் கடைப்பிடித்தல் அத்தியாவசியமானது என்பதையும் அதுவே மாணவருக்கு சிறந்த முன்மாதிரியை வழங்கும் என்பதை ஆழமாக உள்வாங்க வேண்டும்.

இத்திட்டத்தை வலுப்படுத்தும் பிரதேச செயலக ரீதியான பரப்புரைகள் செயற்பாடுகளில் பங்கு கொள்ள விரும்புவோர் எமது வெள்ளிக்கிழமைப் பக்திப் பேரியக்கத்துடன் இணையுமாறு வேண்டுகின்றோம் - என்றுள்ளது.

யாழ்.மாவட்டத்தில் பாடசாலை கல்விக்கு மேலதிகமாக வாரத்தில் எழு நாட்களும் தனியார் கல்வி நிலையங்களினால் நடத்தப்படும் கற்றல்,கற்பித்தல் செயற்பாடுகளை யூலை 1ம் திகதி முதல் வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்று கிழமைகளில் நிறுத்துவதற்காக யாழ் மாவட்ட செயலகத்தினால் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.