Breaking News

இலங்கை மத்திய வங்கி எடுத்துள்ள அதிரடி முடிவு!

 


இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது 2022 ஆம் ஆண்டுக்காக வழங்கப்பட்ட அனுமதிப் பத்திரங்களின் நிபந்தனைகளுடன் இணங்கி ஒழுகாமையின் காரணமாக, கீழே பட்டியிலிடப்பட்டுள்ள 15 நாணய மாற்றுநர்களின் நாணயப் பரிமாற்றல் அனுமதிப் பத்திரங்களை 2023 ஆம் ஆண்டுக்கு புதுப்பிக்காதிருப்பதற்கு தீர்மானித்துள்ளதுடன், இவ்வறிவித்தலானது உரிய நாணய மாற்றுநர்களுக்கு 2023.02.22 ஆம் திகதி அன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கம்பனியின் பெயர் விபரங்கள் பின்வருமாறு,

1. அருண போரெக்ஸ் (பிறைவட்) லிமிடெட் (Aruna Forexc (Pvt) Ltd) - இல.22, புதிய பசார் வீதி, நுவரெலியா

2. பிரேசியா கிராமீன் (பிறைவட்) லிமிடெட் (Brescia Grameen (Private) Limited) - இல.88/02, சிலாபம் வீதி, கட்டுவ, நீர்கொழும்பு

3. ஜெயா போரெக்ஸ் எக்ஸ்சேன்ஜ் (பிறைவட்) லிமிடெட் (Jeya Forex Exchange (Pvt) Ltd) - இல.688, காலி வீதி, கொழும்பு 03

4. கமல் என்டபிரைசஸ் (பிறைவட்) லிமிடெட் (Kamal Enterprises (Pvt) Ltd) - இல.57ஏ, பிரிஸ்டல் பெரடைஸ் கட்டடம், யோக் வீதி, கொழும்பு 01

5. குடாமடு மணி எக்ஸ்சேன்ஜ் (பிறைவட்) லிமிடெட் (Kudamadu Money Exchange (Pvt) Ltd) - பிரதான வீதி, மஹாவெவ

6. மிட்னா மினி மார்கட் (பிறைவட்) லிமிடெட் (Midna Mini Market (Pvt) Ltd) - இல.12, ஷொப்பிங் காம்லெக்ஸ், வென்னப்புவ

7. நியூ லங்கா கோல்ட் ஹவுஸ் (பிறைவட்) லிமிடெட் (New Lanka Gold House (Private) Limited) - இல.59, இரத்தினபுரி வீதி, ஹொரண

8. ரபீக்ஸ் ஜெம்ஸ் (பிறைவட்) லிமிடெட் (Rafeek's Gems (Pvt) Ltd) - இல.109, சத்தம் வீதி, கொழும்பு 01

9. ரிம்ஹா ஜீவலேர்ஸ் (பிறைவட்) லிமிடெட் (Rimha Jewellers (Pvt) Ltd) - இல.4ஏ, மஷ்ஜித் வீதி, புத்தளம்

10. சலாகா டிரஸ்ட் இன்வெஸ்ட்மென்ட் (பிறைவட்) லிமிடெட் (Salaka Trust Investments (Pvt) Ltd) - இல.466, யூனியன் பிளேஸ், கொழும்பு 02

11. ஷாரங்கா மணி எக்ஸ்சேன்ஜ் (பிறைவட்) லிமிடெட் (Sharanga Money Exchange (Pvt) Ltd) - இல.157/1, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்

12. சொர்ணம் போரெக்ஸ் (பிறைவட்) லிமிடெட் (Sornam Forex (Private) Limited) - இல.59, மட்டக்களப்பு வீதி, கல்முனை

13. தமாஷா போரெக்ஸ் (பிறைவட்) லிமிடெட் (Thamasha Forex (Private) Limited) - இல.131, பசார் வீதி, சிலாபம்

14. யுனிவர்சல் மணி சேன்ஜர்ஸ் (பிறைவட்) லிமிடெட் (Universal Money Changers (Pvt) Ltd) - இல.143ஏ, காலி வீதி, கொழும்பு 06

15. வசந்தாஸ் இன்டர்நெஷனல் மணி எக்ஸ்சேன்ஜ் (பிறைவட்) லிமிடெட் (Vasanthas International Money Exchange (Pvt) Ltd) - இல.56, டி எஸ் சேனாநாயக்க வீதி, கண்டி

இதற்கமைய, மேலே பட்டியலிடப்பட்ட கம்பனிகள் நாணயப் பரிமாற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு இனிமேலும் அனுமதிக்கப்படவில்லை என்றும் அத்தகைய கம்பனிகளுடன் வெளிநாட்டு நாணயத்தை வாங்குதல், விற்பனை செய்தல் மற்றும் பரிமாற்றம் செய்தல் என்பன 2017ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணி சட்டத்தின் ஏற்பாடுகளை மீறியதாகக் கொள்ளப்படும் என்றும் இத்தால் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படுகின்றது.