லியோ படப்பிடிப்பை நிறைவு செய்த விஜய்.. லோகேஷ் நெகிழ்ச்சி!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
'லியோ' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் இடம்பெற்ற "நா ரெடி" பாடல் விஜய்யின் பிறந்தநாளையொட்டி வெளியாகி யூடியூபில் 50 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
அதன்படி, 'லியோ' திரைப்படத்தில் தனக்கான காட்சிகளை விஜய் நடித்து முடித்துள்ளார். இதனை லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைதளத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளார். மேலும், "இரண்டாவது பயணத்தை மீண்டும் சிறப்பானதாக மாற்றியதற்கு நன்றி அண்ணா" என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.