பிரான்ஸ் சென்றடைந்த மோடி: விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் கொண்டாட்டத்தில் இந்திய பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இதற்காக இரண்டு நாள் பயணமாக இன்று டெல்லியில் இருந்து புறப்பட்ட பிரதமர் மோடி பிரான்ஸ் சென்றடைந்தார்.
அவருக்கு பாரிஸ் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் எலிசபெத் போர்ன் விமான நிலையத்திற்கு வந்து மோடியை வரவேற்றார். சிவப்பு கம்பள வரவேற்புடன் ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது.
இந்த வரவேற்பைத் தொடர்ந்து ஓட்டலுக்கு சென்ற பிரதமர் மோடியை இந்திய வம்சாவளியினர் உற்சாகமாக வரவேற்றனர். இன்று இரவு 11 மணியளவில் இந்திய சமூகத்தினர் சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்ற உள்ளார்.
நாளை நடைபெற உள்ள பிரான்ஸ் தேசிய தின அணிவகுப்பில், இந்திய விமானப்படையின் ரபேல் போர் விமானங்கள் மற்றும் 77 வீரர்கள் அடங்கிய குழு தின அணிவகுப்பில் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.