Breaking News

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் மைத்திரி வௌியிட்ட அறிக்கை!

 


உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பில் அரசாங்கம் முன்வைத்த பாராளுமன்ற பிரேரணையானது நாட்டின் தேசிய பொருளாதாரம் எதிர்நோக்கும் நெருக்கடிக்கு தீர்வு காண்பதில் குறிப்பிடத்தக்க சாதகமான பங்களிப்பை வெளிப்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வௌியிட்ட அவர், மேலும் விவாதிக்கப்பட வேண்டிய சில விடயங்கள் மட்டுமே உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

எந்தவொரு தரப்பினரும் இந்தப் பிரேரணையை விமர்சித்தால் அதற்கு மாற்று வழியை முன்வைக்க வேண்டும் என்றும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்..

அதன்படி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இந்த விடயத்தில் நடுநிலைக் கொள்கையை கடைப்பிடிக்கும் என மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.