சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை உயர்த்த நடவடிக்கை : ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!
நாட்டுக்கு வருடாந்தம் வருகைத்தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை 5 மில்லியனாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இந்திய சுற்றுலா சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட எல்லைகளை கடந்து – வாழ்வை மாற்றும் என்ற நிகழ்ச்சி நேற்று இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரசிங்க, BIMSTEC வலயத்தை எல்லைகளுக்கு அப்பால் அபிவிருத்தியடைந்த சுற்றுலாப் பிரதேசமாக மேம்படுத்த அனைத்து BIMSTEC நாடுகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
புதிய திட்டங்கள் இலங்கையை கவர்ச்சிகரமான சுற்றுலாத் ஸ்தலமாக மாற்றும் என்றும் அவர் தெரிவித்தார்.
தற்போது இலங்கைக்கு வருடாந்தம் 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர் என்றும் அதை 5 மில்லியனாக உயர்த்துவதற்கு திட்டமிட வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
ஒரு சுற்றுலா பயணி ஒரு இரவுக்கு 1000 டொலர்களை செலவழிக்க ஒரு கவர்ச்சிகரமான திட்டத்தை உருவாக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.