Breaking News

கட்டுப்பாட்டை இழந்து சந்திரனில் மோதிய ரஷ்யாவின் லூனா-25!

 


ரஷ்யாவின் லூனா-25 விண்கலம் கட்டுப்பாட்டை இழந்து சந்திரனில் விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

50 ஆண்டுகளில் ரஷ்யாவின் முதல் நிலவுப் பயணம் இதுவாகும்.

நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் ஆளில்லா விண்கலம் இதுவாகும். ஆனால் இது தரையிறங்குவதற்கு சுற்றுப்பாதையில் சென்ற நிலையில் கட்டுபாட்டை இழந்துள்ளது.

சந்திரனின் ஒரு பகுதியை ஆராய்வதற்காக கடந்த 11 ஆம் திகதி ரஷ்யாவின்  Vostochny Cosmodrome ல் இருந்து லூனா-25; விண்ணிற்கு அனுப்பட்டிருந்தது.

லூனா -25 உடனான தொடர்பு நேற்று மாலை முதல் இழக்கப்பட்டுள்ளதாக ரஷ்யாவின் மாநில விண்வெளி நிறுவனமான Roscosmos, தெரிவித்துள்ளது.

இதேவேளை சந்திரயான்-3 விண்கலம் அடுத்த வாரம் தரையிறங்கவுள்ள இந்தியாவுக்கு எதிராக நிலவின் தென் துருவத்தை நோக்கி ரஷ்யாவின் லூனா -25 ஏவப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.