மிக நீளமான தாடிக்காக கின்னஸ் சாதனை படைத்த அமெரிக்க பெண்!
ஆண்கள் தாடி வளர்ப்பது பொதுவானது. அதே நேரம் பெண்கள் முகத்தில் மீசை வளர்ந்தால் சங்கடப்படுவார்கள். ஆனால் மீக நீளமான தாடிக்காக கின்னஸ் சாதனை படைத்துள்ளார் அமெரிக்க பெண் ஒருவர்.
எரின் ஹனிகட் என்ற 38 வயதான அந்த பெண் ஹார்மோன் சமநிலையின்மை பிரச்சனையால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் அவருக்கு ஒழுங்கற்ற மாதவிடாய், எடை அதிகரிப்பு போன்ற பிரச்சனைகளும் வந்துள்ளது.
இதற்காக சிகிச்சைகள் பெற்ற நிலையிலும் தொடர்ந்து அவரது முகத்தில் தாடி வளர ஆரம்பித்தது. பலமுறை அகற்றியும் தாடி வளர்ந்ததால் ஒரு கட்டத்தில் அவர் தாடியை அகற்றுவதை நிறுத்தி விட்டார்.
அதோடு அதனையே சாதனையாக மாற்றுவதற்கும் முடிவு செய்த அவருக்கு சுமார் 30 சென்டி மீட்டர் அதாவது 11.8 அங்குலம் தாடி வளர்ந்தது. இதன் மூலம் ஒரு பெண்ணால் இவ்வளவு நீளமான தாடி வளர்த்து கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடித்தார்.
அவருக்கு முன்பு அமெரிக்காவை சேர்ந்த 75 வயது பெண் விவியன் வீலர் இந்த சாதனையை படைத்திருந்தார். அவருக்கு 25.5 சென்டி மீட்டர் தாடி இருந்தது. இந்த சாதனை குறித்து பேசிய எரின் ஹனிகட் கின்னஸ் சாதனையில் இடம்பெறுவேன் என்று நினைக்கவில்லை என தெரிவித்தார்.