நான்தான் சூப்பர் ஸ்டார் என்று விஜய் சொன்னாரா..? பேரரசு அதிரடி பேச்சு!
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான பேரரசு, திருப்பாச்சி, சிவகாசி, திருப்பதி போன்ற பல படங்களை இயக்கி பிரபலமானார். இவர் அவ்வப்போது சர்ச்சை கருத்துகளை பேசி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
சமீபத்தி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் பேரரசு, நான் தான் சூப்பர் ஸ்டார் என்று விஜய் எப்போதாவது சொன்னாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் பேசியதாவது, "சூப்பர் ஸ்டார் பட்டம் ரஜினி சார் கேட்டு வாங்கியது இல்லை. தளபதி என்றால் விஜய், சூப்பர் ஸ்டார் என்றால் ரஜினி . இது மிகப்பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது.
இது விஜய் மற்றும் ரஜினி சாருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கும். நான் தான் சூப்பர் ஸ்டார் என்று விஜய் எப்போதாவது சொன்னாரா? சில விஷயங்களை நாம் கடந்து போக வேண்டும். சூப்பர் ஸ்டார் என்பது பட்டம் அதில் நம்பர் ஒன் யார் என்று பேசலாம். சூப்பர் ஸ்டார் என்பது பட்டம் அதை விஜய் சாரும் கேட்கவில்லை.
ரஜினி சாரும் சூப்பர் ஸ்டார் நாற்காலி யாருக்கும் சொந்தமில்லை என்று சொல்லியிருக்கிறார். பட்டம் என்பது விஷயமில்லை. யாரும் அடுத்த உலகநாயகன், அடுத்த நடிகையர் திலகம் என்று கூறுவது இல்லை. சூப்பர் ஸ்டார் என்பது அதுமாதிரியான ஒரு பட்டம் தான். அரசியலில் தான் வாரிசு என்றால் சினிமாவிலும் ஏன் பட்டத்தை வைத்து வாரிசு என்கிறீர்கள். பட்டத்தை பட்டமாக பாருங்கள்" என்று பேசினார். இந்த கருத்து தற்போது வைரலாகி வருகிறது.