Breaking News

முச்சக்கரவண்டி கட்டணம் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்!

 


எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ள போதிலும், முச்சக்கர வண்டி கட்டணங்களை தற்போதைக்கு மாற்றியமைப்பதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் தொழிற்சங்கத்தின் தலைவர் லலித தர்மசேகர ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மாதந்தோறும்  எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படுகின்ற நிலையில் முச்சக்கர வண்டி கட்டணத்தையும் அவ்வாறு மாற்றியமைக்க முடியாது என சுட்டிக்காட்டியுள்ளார்.

சிபெட்கோ எரிபொருள் விலை நேற்று (01) நள்ளிரவு முதல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஒக்டேன் 92 பெற்றோல் லீற்றர் 4 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 365 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

ஒக்டேன் 95 லீற்றர் ஒரு லீற்றர் 3 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 420 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

இதேவேளை, லங்கா ஒட்டோ டீசல் லீற்றர் 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, அதன் புதிய விலை 351 ரூபாவாகும்.

லங்கா சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 62 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, அதன் புதிய விலை 421 ரூபாவாகும்.

மண்ணெண்ணெய் 11 ரூபாவால் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.