உண்மைய சொல்ல லியோ தான் உயிரோடு வரணும்- இணையத்தை கலக்கும் லியோ ட்ரைலர்!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'லியோ' திரைப்படம் அக்டோபர் மாதம் 19-ம் தேதி வெளியாக உள்ளது.
இப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.
இதையடுத்து இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் 'இதுக்கு மேல உண்மைய சொல்லனும்னா லியோ தான் உயிரோடி வரணும்' போன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ள இந்த டிரைலரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து ட்ரெண்டாக்கி வருகின்றனர்.